பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு (makasi)

சம்பந்தப்பட்டவர்கள் அரசு அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தாலும் அளிக்கவிட்டாலும், நாங்கள் கடத்தலுக்கு ஆட்படுத்தப்பட்ட பெண்களுக்கு பல வழிகளிலும் உதவியும் துணையும் புரிகிறோம்.

நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி குறித்த சட்டத்தின்படி (OHG) பொருளுதவி அளிக்கிறோம். மேலும் பாதுகாப்பான தங்குமிடம், மற்றும் தினசரி வாழ்க்கையை எதிர்க்கொள்ள உதவி ஆகியவற்றையும் அளிக்கிறோம். இவை அனைத்தும் மிகவும் இரகசியமாக, கட்டணமின்றி.

நாங்கள் யாருக்கு உதவி அளிக்கிறோம்?

கீழ்கண்ட புலம் பெயர்ந்த பெண்களுக்குத் துணை நின்று நாங்கள் அவர்களுக்கு ஆலோசனையும் உதவியும் அளிக்கிறோம்.
 
 • அயல்நாடுகளிலிருந்து பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு, மனித கடத்தலில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர்களால் சுவிஸ் நாட்டிற்கு வரவழைக்கப்பட்டு, சுரண்டலுக்கு ஆளாகிய பெண்கள்.
 • பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு, பாலியல் ரீதியான சுரண்டலுக்கு ஆளாகிய பெண்கள்
 • மிகவும் மோசமான சூழ்நிலைகளில் தனியார் இல்லங்கள், உணவகங்கள், துப்புரவு, விவசாயம் அல்லது பிற தொழில்களில் பணி புரிந்து, சுரண்டலுக்கு ஆளாகிய பெண்கள்

எவ்விதத்தில் நாங்கள் உதவி சசெய்கிறோம்?

நாங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பலவழிகளில் உதவுகிறோம். துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு குறுக்கீடும் செய்கிறோம். அதில் கீழ்க்காணும் அனைத்தும் அடங்கும்.
 
 • பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி குறித்த சட்டத்தின்படி (Opferhilfegesetz [OHG]) ஆலோசனை மற்றும் தகவல் அளித்தல்
 • OHG/சமூக நிதி உதவி வாயிலாக பொருளுதவி அளித்தல்
 • நெருக்கடி நிலை குறுக்கீடு மற்றும் மனநல, சமூக ரீதியான ஆலோசனை, மேலும் அதீத மன உளைச்சலுக்கு ஆளாகும் பொழுது உதவி அளித்தல்
 • பாதுகாப்பான தங்குமிடத்தினை அளித்தல்
 • அரசு அலுவலர்கள், இருபாலரைச் சார்ந்த வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் இன்ன பிறருடன் தகவல் பரிமாற்றம் மற்றும் இணைந்து செயல்படுதல்
 • குற்றவியல் வழக்கு நடைமுறை குறித்த ஆலோசனை அளித்தல் மற்றும் குற்றவியல் வழக்கு நடைமுறை விதிகளின்படி (StPO) ஒரு நம்பகமான நபராகத் துணைக்கு வருதல்
 • குடியேறும் உரிமை குறித்த சட்ட ஆலோசனை மற்றும் குறுக்கீடு
 • தானாக உவந்து தாய்நாடு செல்ல விருப்பம் தெரிவித்தால் அதற்கு உதவி செய்தல்
 • சுவிஸ் நாட்டில் தங்க விருப்பப்பட்டால் சமூக மற்றும் தொழில் ரீதியாக ஒருங்கிணைந்து வாழ உதவி அளித்தல்

தொடர்பு 

FIZ பெண்கள் கடத்தல்
மற்றும் பெண்கள் புலம்
பெயர்தலுக்கானத் துறை

(FIZ Fachstelle
Frauenhandel und Frauenmigration)

Hohlstrasse 511
8048 Zürich
044 436 90 00
contact@fiz-info.ch