பெண்கள் கடத்தல் மற்றும் பெண்கள் புலம் பெயர்தலுக்கானத் துறையான FIZ வன்முறையாலும், சுரண்டலாலும் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த பெண்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் பாடுபடுகிறது. இதற்காக இத்துறை புலம் பெயர்ந்த பெண்களுக்கான ஆலோசனை மையமும் கடத்தலுக்கு ஆட்படுத்தப்பட்ட பெண்களுக்கான பிரத்தியேகமான மகசி (Makasi) குறுக்கீட்டு மையத்தினையும் நடத்தி வருகிறது. கூடுதலாக இத்துறை சமூக மற்றும் அரசியல் ரீதியான விழிப்புணர்வினை உருவாக்கவும் செயல்படுகிறது.